தமிழ் + கணினி

 • பதிவர் :

  கா. சேது | K. Sethu

 • உரிமம்

  Creative Commons License
  இத் தளத்தில் உள்ளடக்கப்படும் எனது வலைப்பதிவுகள், பக்கங்கள் மற்றும் எனது ஏனைய ஆக்கங்கள் அனைத்தும் மேற்காட்டிய Creative Commons Attribution-ShareAlike 3.0 License உரிமத்துடன் அளிக்கப்படுபவன. இவ் உரிமம் பயன்படுத்துவது பற்றிய எனது வழிகாட்டி பார்க்க : உரிமம் வழிகாட்டி
  ======================

 • மறுமொழி / பின்னூட்டம் / முன்னிகை இடல் பற்றி

 • பக்கங்கள்

 • Advertisements

வணக்கம்

Posted by கா.சேது | K. Sethu மேல் 2009-12-09 21:35

கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு

தங்கள் வருகை நல்வரவாகுக என அனைவரையும் வரவேற்கின்றேன்.

“இத் தளம் பற்றி” தலைப்புடனான பக்கத்தில் இத் தளத்தை ஏற்படுத்தியதற்கான எனது நோக்கங்களைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

என்னால் பதிப்பிற்கக் கூடியவைகள் என நான் எதிர்பார்ப்பவைகள்  அநேகமாக கனூ/லினக்சு இயங்குத்தளங்களில் (குறிப்பாக நான் எனது வீட்டுக் கணினியில்  பாவித்துவரும் உபுண்டு வழங்கல்களினால் ஆனவைகளில்) இருக்கும் தமிழ்க் கணிமை நிலைகள் பற்றியதாகவே இருக்கும்.

ஆயினும் விண்டோசு இயங்குத்தளத்திலும் பயர்பாக்சு, கூகுள் குரோம், ஓபன் ஆபிசு போன்ற பன்ம இயங்குதளங்கள் பரம்பலான பயன்பாடுகளில் தமிழ் இடைமுகப்புகள் மற்றும் தமிழ் உள்ளிடல் போன்றவைகள் பற்றியும் சிற்சில பதிவுகள் அவ்வப்போது  எழுதவுள்ளேன்.

ஒருங்குறிக்கான விசைமுகப்புகள் (keymaps), குறியேற்ற மாற்றிகள் (encoding converters), வரிசைப்படுத்துதல் (collation), லினக்சில் Fontconfig கட்டமைப்பு, அக்கட்டமைப்பால் எழுத்துரு பொருத்தங்கள் நிகழ்விக்கப்படும் முறைகள், உரை உருவாக்கிகளில் தமிழ் வீச்சில் உள்ள வழு நிலைகள், பல தமிழ் எழுத்துருக்களில் உள்ள குறைபாடுகள் போன்ற விடயங்கள் பற்றிய பதிவுகளுக்கு வரைவுகள் ஆக்கி வருகின்றேன்.  வரவிருக்கும் அவ்வாறான இடுகைகளுக்குத் துணையாக உதவக்கூடிய அவ் விடயங்கள் தொடர்பான பல அடிப்படைப் பின்னனித் தகவல்கள் மற்றும் அவற்றிற்கான எனது விளக்கங்ககள் ஆகியனவற்றைத் தொகுப்பதிலும் தற்போது ஈடுபட்டு வருகின்றேன்.

அத் தொகுப்புக்கள் எனது இன்னொரு வேர்ட்பிரஸ் தளமான http://kaasethu.wordpress.com இல் (வலைப்பதிவாக அல்லாமல்) வலைப் பக்கங்களாக அமைத்து பின்னர் இங்கு வரும் இடுகைகளில் தேவைப்படும் இடங்களில் உசாத்துணக்காகச் சுட்டிக்காட்டாலாம் என எண்ணியுள்ளேன்.

அடுத்த சில நாட்களுக்கள் தற்போது பக்கப் பலகத்தில் உள்ள “உரிமம் : வழிகாட்டி” எனத் தலைப்புள்ள தொடுப்புக்கான பக்கத்தில் ஆங்கிலத்தில் நான் விளக்கியுள்ள முக்கிய (இன்னும் முற்றுப்பெறா) தகவல்களைத் தமிழில் மீள் எழுதி இறுதியாக்கம் செய்யவுள்ளேன். அதன் பின்னரே எனது அடுத்த பதிவை இடவுள்ளேன்.

விரைவில் எனது அடுத்தப் பதிவை முன் வைப்பேன் எனக் கூறி விடை பெறுகிறேன்.

கா. சேது
2009-12-09

Advertisements

5 பதில்கள் to “வணக்கம்”

 1. வணக்கம்…

  உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாயுள்ளேன்.

  நிமல்

 2. வணக்கம் ஐயா. இனியாவது ஏதாவது எழுதலாமே. நீங்கள் எழுதுவதற்குத்தான் எத்தனையோ இருக்கின்றதே.

 3. அன்பு அய்யா,
  எளியேனின் பணிவான வணக்கங்கள்.
  உங்களின் கணினி சார் அறிவும் மற்றும் மொழி சார் அறிவும் அனைத்து தமிழருக்கும் சென்று சேர வேண்டும். தமிழர் அனைவரும் அறிவு விழிப்பு நிலை பெற வேண்டும் என அன்புடன் விழைகிறேன்.
  அய்யா தாங்கள் http://groups.google.com/group/theyva-thamizh குழுமத்தில் இணைந்து தங்களின் அறிவு சார் கருத்துக்களை எழுத வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன்.
  அன்பு சகோதரன்
  நக்கினம் சிவம்

 4. அய்யா,
  உபுண்டு 11.04 -ல் தமிழ் நன்கு உள்ளீடு செய்ய முடிகிறதா? 10.10 -ல் scim மூலம் தமிழ் 99 தட்டச்சு வடிவமைப்பில் தட்டச்சு செய்ய இயலவில்லை. 11.04- ல்
  இயலுமா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: